வகைப்படுத்தப்படாத

போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளது-அமைச்சர் அர்ஜுன ரணதுங்க

(UTV |COLOMBO):நாடுமுழுவதும் போதுமான அளவு எரிபொருள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கனியவள அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வதந்தி பரவி இருந்த நிலையில், கொழும்பிலும் சில நகரங்களிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில்அதிக வாகன நெரிசல் காணப்பட்டது.
எனினும் தற்போது அந்த நிலைமை வழமைக்கு திரும்பியுள்ளது.
நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த வதந்தியை பரப்பியவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய குற்றப் புலனாய்வு பிரிவிடம் முறையிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

Momoa leads Netflix’s “Sweet Girl” film

ரஷியாவில் 71 பேரை பலிகொண்ட விமான விபத்து குறித்து விசாரணை தீவிரம்

Sri Lanka, West Indies fined for slow over rate