வகைப்படுத்தப்படாத

2018-பாதீட்டு குழுநிலை விவாதத்தின் நான்காம் நாள் இன்று

(UTV | COLOMBO)-இன்றயைதினம் உயர் கல்வி மற்றும் பெருந்தெருக்கள், நிபுணத்துவ அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி ஆகிய அமைச்சகளுக்கான ஒதுக்கம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

 

விவாதத்தின் 3ம் நாளான நேற்று, நீதி, அபிவிருத்தி மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை ஆகிய அமைச்சுகள் குறித்த விவாதம் இடம்பெற்றது.

 

நேற்றைய விவாதத்தில் கருத்து வெளியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், பயங்கரவாத தடை சட்டத்தை விரைவாக நீக்கி, அதற்கு பதிலாக புதிய சட்டத்தை அமுலாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் நீண்டகாலம் தீர்க்கப்படாதுள்ள அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பிலும் அரசாங்கம் விரைவாக அவதானம் செலுத்த வேண்டும்.

 

இதற்காக நீதி அமைச்சர், ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலையீட்டுடன், சட்ட ஒழுங்குகள் அமைச்சர், சட்ட மா அதிபர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பின் பங்குபற்றுதலுடன் விசேட பேச்சுவார்த்தைக்கு ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் கோரினார்.

 

இதற்கிடையில், காலி – கிங்தொட்டை வன்முறை சம்பவமானது, அரசாங்கத்துக்கு அவப்பெயரைத் தந்துள்ளதாக ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நீதியமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த அரசாங்கக் காலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன.

 

ஆனால் அதனை தற்போதைய நல்லாட்சி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்திருந்தது.

 

தற்போது மீண்டும் அவ்வாறான வன்முறைகள் இடம்பெற்றுள்ளமையானது அரசாங்கத்துக்கு அவப்பெயரைத் தந்துள்ளது.

 

இந்தநிலையில் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த நீதித்துறை பலமான செயற்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜாங்க அமைச்சர் விஜயகலா கோரியுள்ளார்.

 

அதேநேரம் பாதீட்டின் இரண்டாம் வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் மக்கள் தங்களிடம் கேள்வி எழுப்புவதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார்.

 

அரசியல் கைதிகளின் விடுதலை, காணி விடுவிப்பு, காணாமல் போனோர் விடயம் என்பன தீர்க்கப்படாதுள்ள நிலையில், எதற்காக அரசாங்கத்தின் பாதீட்டுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக வாக்களித்தது என்று மக்கள் கேள்வி எழுப்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

Related posts

Sri Lanka inks agreement with India to upgrade railway lines

கண்டி பொது மருத்துவமனையில் நபரொருவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

வடகொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை