(UTV | COLOMBO) – இன்று முதல் அனைத்து வைத்திய பீடங்களிலும் மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
10 மாதங்களுக்குப் பின்னர் மாணவர்கள் இவ்வாறு கல்வி நடவடிக்கையில் இன்று கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மாலபே தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் வைத்திய பீட மாணவர்கள் அனைவரும் வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில், அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைய, இன்று முதல் தமது போராட்டத்தைக் கைவிட தீர்மானித்துள்ளதாக, வைத்திய பீட மாணவர் செயற்குழு அமைப்பாளர் ரயன் ஜெயலத் குறிப்பிட்டுள்ளார்.
எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.