வகைப்படுத்தப்படாத

ஆயுர்வேத வைத்தியசாலைகளில் மருந்து தடுப்பாட்டை தீர்க்க கணனி மென்பொருள்

(UDHAYAM, COLOMBO) – பொது வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள் மற்றும் பிரதேச வைத்தியசாலைகளுக்கும் இவ்வாறான மென்பொருளை அறிமுகப்படுத்தி மருந்து தட்டுப்பாட்டை தீர்த்துள்ளதாக சுகாதார போஷாக்கு மற்றும் சுதேசிய மருத்துவத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

பொரளை ஆயுர்வேத போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது அமைச்சர் இதனைகூறினார். ராஜகிரிய சுதேச வைத்திய கல்லூரியின் மாணவ சங்க பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு ஆயுர்வேத வைத்திய பட்டதாரிகளுக்காக தற்போது நடைமுறையிலுள்ள பாடவிதானங்களில் திருத்தங்களை மேற்கொள்வது குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது. விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறை குறித்தும் அங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

Related posts

சகல பாதாள உலகக் கும்பல்களும் ஒடுக்கப்படு;ம் – பொலிஸ்மா அதிபர்

அலுவலக ரயில் சேவைகளில் சிக்கல் இல்லை

Army Commander before PSC