கேளிக்கை

வசமாக சிக்கிய காயத்ரி ரகுராம்..! ஆதாரத்துடன் அசிங்கப்படுத்திய கமல்ஹாசன்!!

(UDHAYAM, COLOMBO) – நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலங்களின் இன்னொரு முகம் தமிழ் ரசிகர்களுக்கு தெரியவந்துள்ளது.

இதில் காயத்ரி ரகுராம் அவரின் செயல் மற்றும் வார்த்தை பிரயோகத்தால் சிலரை தொடர்ந்து காயப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் இவர் தனக்கு கால்சியம் குறைபாடு இருக்கிறது சாக்லேட் பவுடர் வேண்டும் என்று பிக்பாஸிடம் கோரியிருந்தார்.

மேலும், இரத்தப்பரிசோதனை செய்த மருத்துவர் தனக்கு குறைபாடு இருக்கிறது என்பதை உறுதி செய்துள்ளதாகவும் அனைவரிடமும் கூறினார்.

ஆனால் நேற்று கமல்ஹாசன், பிக்பாஸ் காயத்ரியிடம் கால்சியம் சீராக இருக்கிறது என்று கூறியதை வெளியில் வந்து மாற்றி பொய் பேசியதை வெளிச்சம் போட்டுக் காட்டினார்.

இதை சற்றும் எதிர்பாராத காயத்ரி உடனே தனக்கு சீராக என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று கூறி சமாளித்தார்.

Related posts

ஜெயலலிதாவாக மாறும் ரம்யா கிருஷ்ணன்

தள்ளிப்போகிறதா தர்பார்?

கமல்ஹாசனுக்கு வில்லனா விஜய்?