விளையாட்டு

இலங்கை, சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4 ஆம் நாள் ஆட்டம் இன்று

(UDHAYAM, COLOMBO) – சுற்றுலா சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையில் இடம்பெற்றுவரும் ஒற்றை டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

இந்தநிலையில் நேற்றைய ஆட்டநேர நிறைவின் போது, தமது 2வது இன்னிங்ஸிற்காக துடுப்பாடி வரும் சிம்பாப்வே அணி 6 விக்கட்டுக்களை இழந்து 252 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக சிம்பாப்வே அணி தமது முதலாவது இன்னிங்ஸில் 356 ஓட்டங்களையும், இலங்கை அணி தமது முதலாவது இனிங்சிற்காக 346 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்காவிற்கு இடையில் இடம்பெற்று வரும் 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 4ஆம் நாள் ஆட்டம் இன்று தொடரவுள்ளது.

இதன்படி 474 என்ற வெற்றி இலக்கை நோக்கி தமது இரண்டாவது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின் போது விக்கட் இழப்பின்றி 1 ஓட்டத்தை பெற்றிருந்தது.

முன்னதாக தென்னாபிரிக்க அணி தமது முதலாவது இனிங்கிற்காக 335 ஓட்டங்களையும், இரண்டாம் இனிங்சிற்காக ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 343 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆரோன் பிஞ்ச் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

கொரோனா காரணமாக கிரிக்கெட்டில் ‘எச்சில்’ பயன்படுத்த தடை