வகைப்படுத்தப்படாத

தேசிய அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வது அனைவரதும் பொறுப்பு – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – எவ்வகையான தடைகள் வந்தாலும் தேசிய அரசாங்கத்தை முன்னோக்கிக் கொண்டுச் செல்வது அனைவரதும் பொறுப்பு என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அரச மற்றும் தனியார் தொழிற்சங்கத்தினருக்கான பன்னிப்பிட்டியவில் அமையவுள்ள 500 குடியிருப்புக்களைக் கொண்ட வீட்டுத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டங்களுக்காகவே 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் வெற்றிப்பெற்ற தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டது.

கடந்த கால அரசாங்கத்தினால் நிலுவையில் வைக்கப்பட்ட கடன்களை கட்டுப்படுத்திக் கொண்டு தற்போது பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுன்னப்படுகின்றன.

இதனை அனைவரும் ஒன்றிணைந்து முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.

Related posts

சிவனுக்குரிய மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிப்பு

පොලිස් නිලධාරීන් 143 දෙනෙකුට ලක්ෂ 40ක ත්‍යාග මුදලක්

வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்