வகைப்படுத்தப்படாத

டி-59 ரக துப்பாக்கியுடன் இருவர் கைது

(UDHAYAM, COLOMBO) – டி – 56 ரக துப்பாக்கி மற்றும் 25 ரவைகளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபர்கள் இருவர் மீரிகம, கிதலவலான பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தவலையடுத்து, நேற்று முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் அதே பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை இன்றைய தினம், அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Related posts

எதிர்வரும் சில நாட்களுக்கு ஜனாதிபதி எந்தவொரு இந்திய விஜயத்திலும் ஈடுபடமாட்டார் – ஜனாதிபதி செயலகம்

வைத்தியசாலை மருந்துக் களஞ்சியசாலையில் தீ

கோட்டாபயவை கைது செய்வதற்கான இடைக்கால தடை நீடிக்கப்பட்டுள்ளது