வகைப்படுத்தப்படாத

ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிய நபர்!!

(UDHAYAM, COLOMBO) – ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிய நபரொருவர் அங்கிருந்து தன்னை காப்பாற்றுமாறு பற்றுச்சீட்டொன்றை வெளியில் அனுப்பியுள்ள சம்பவம் அமெரிக்கா – டெக்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நபர் ஏ.டி.எம் இயந்திரத்தினுள் பழுதுபார்க்கும் நடவடிக்கைகாக நுழைந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வரமுடியாமல் சிக்கியுள்ளார்.

அவரது கையடக்க தொலைபேசியையும் மோட்டார் வாகனத்தில் வைத்து சென்றுள்ளதால் தன் சிக்கியுள்ள தகவலை வெளிப்படுத்த முடியாமல் போயுள்ளது.

எனினும் அந்த இடத்திற்கு பணம் எடுக்க நபரொருவர் வந்துள்ள நிலையில் அந்த நபர் பெற்று கொண்ட பணத்திற்கான பற்றுச்சீட்டில் என்னை காப்பாறுமாறு எழுதப்பட்டிருந்துள்ளது.

பின்னர் அது தொடர்பில் குறித்த நபர் தகவல் வழங்கியதையடுத்து ஏ.டி.எம் இயந்திரத்தில் சிக்கிய நபர் காப்பாற்றப்பட்டுள்ளார்.

Related posts

இத்தாலியை கடுமையாய் தாக்கிய புயல்

3 கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய பொருட்கள் அழிக்கப்படவுள்ளன

பதவியிலிருந்து விலகுகிறார் ஏஞ்சலா மெர்கல்