வகைப்படுத்தப்படாத

மட்டக்களப்பில் தீவிரமாக பரவி வரும் டெங்கு

 

(UDHAYAM, COLOMBO) – மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் டெங்கு நோய் தீவிரமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிந்திய நிலையில் ஒரு மாத குழந்தை ஒன்று டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் முதல் ஆறுமாத காலப்பகுதியில் மட்டக்களப்பில் டெங்கினால் மூன்று பேர் பலியாகியுள்ளதுடன் 978 பேர் பாதிக்கப்படடுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், இன்று காலை பாடசாலைகளில் டெங்கு விழிப்பூட்டல் நிகழ்வுகள் இடம்பெற்றன.

மஞ்சந் தொடுவாய் பாரதி வித்தியாலயத்தில் அதிபர் தலைமையில் பாரிய டெங்கு விழிப்புணர்வு பேரணியும் மாணவர்களுக்கு விழிப்பூட்டல் நிகழ்வும் இடம்பெற்றுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஈரானில் 4.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

කොළඹ ප්‍රදේශ කීපයකට අඩු පීඩනයක් යටතේ ජලය බෙදාහැරේ.

பொசொன் தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவைகள்