வகைப்படுத்தப்படாத

புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருகின்றது

(UDHAYAM, COLOMBO) – பூகோளரீதியாக எழுந்துள்ள தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்கும் வகையிலேயே, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் உருவாக்கப்பட்டு வருவதாக, சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஆரம்பமான எட்டாவது தென்னாசிய நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் உரையாற்றும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

தற்போதுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி, புதிய தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலத்தை அமுலாக்க அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஆனால், தீவிரவாத முறியடிப்பு சட்ட மூலம் சர்வதேச விதிகளுக்கு ஏற்றாற்போலும் மனித உரிமைகள் மீறப்படாத வாரும் சமநிலையுடன் தயாரிக்கப்பட வேண்டியது ஒரு சவாலாகும்.

எனவே இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடனும், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களுடனும் அரசாங்கம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சட்ட அமுலாக்கத்தின் போது மனித உரிமைகள் விடயத்தில் ஏற்படுகின்ற தாக்கங்கள் குறித்து ஆராய்வதற்காக, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத முறியடிப்பு தொடர்பான விசேட அறிக்கையாளரையும் இலங்கைக்கு அழைத்து கலந்துரையாடி இருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

Related posts

டோரியன் சூறாவளியால் இதுவரை 05 பேர் உயிரிழப்பு

How to get UAE tourist visa fee waiver for kids

அமெரிக்க பங்குச் சந்தை சரிவு