அரசியல்உள்நாடு

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 பேரில் 35 வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இடம்பெற்ற 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில் இம்முறை முதன்முறையாக 39 பேர் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தினர்.

இதற்கமைய வேட்புமனுத்தாக்கல் செய்த ஜதுருஸ் மொஹம்மட் இல்யாஸ் இயற்கை எய்தினார்.

ஜனாதிபதித் தேர்தல் 2024.09.21 ஆம் திகதி சனிக்கிழமை இடம் பெற்றது.

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க 42.31 சதவீத வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச 32.76 சதவீத வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க 17.27 சதவீத வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ 2.57 சதவீத வாக்குகளையும், சுயேட்சை வேட்பாளர் பா.அரியநேத்திரன் 1.70 சதவீத வாக்குகளையும் பெற்றுக் கொண்டனர்.

ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் ஒருவர் 75,000 ரூபாவையும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிசார்பில் போட்டியிடும் ஒருவர் 50,000 ரூபாவையும் கட்டுப்பணமாக செலுத்த முடியும்.

கட்டுப்பணத்தின் தொகை குறைந்தளவில் காணப்படுவதால் தான் அதிகளவிலானோர் தேர்தல் போட்டியிடுவதற்கு முன்னிலையாகுகிறார்கள்.

செலுத்தும் கட்டுப்பணத்தை காட்டிலும் அவர்களுக்கு அதிகளவில் செலலழிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

ஆகவே கட்டுப்பணத்தை 20 இலட்சத்துக்கு மேல் அதிகரிக்குமாறு பல்வேறு தரப்பினர்கள் ஆணைக்குழுவிடமும், அரசாங்கத்திடமும் வலியுறுத்தி வருகின்றனர்.

-இராஜதுரை ஹஷான்

Related posts

பொலிஸ் அதிகாரிகள் இருவர் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

பாராளுமன்ற ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து விபத்து

இதுவா இளைஞர்கள் எதிர்பார்த்த மாற்றம் ? நிமல் லான்சா

editor