உள்நாடு

$35.3 மில்லியன் செலுத்தி டீசல் டேங்கர் ஒன்று விடுவிப்பு

(UTV | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள டேங்கரில் 37,500 MT டீசலுக்கு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு $35.3 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, விரைவில் டீசலினை விநியோகிக்கும் பணிகள் தொடங்கும் எனவும் குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நேற்று (22) உயர்மட்ட அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து எரிபொருள் ஏற்றுமதிக்கு தேவையான டொலர்கள் ஒதுக்கப்பட்டதாக கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹீனடியன மஹேஷின்’ பிரதான உதவியாளர் கைது!

சபாநாயகரை சந்தித்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்

editor

சீரற்ற காலநிலை : அவசர உதவிகளுக்கான தொலைபேசி இலக்கம்