விளையாட்டு

35 ஓட்டங்களால் இலங்கை வெற்றியை ருசித்தது…

(UTV|COLOMBO) இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் டக்வத்லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

எதின்பேர்க்கில் (Edinburgh)  இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 322 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும், அவிஸ்க பெர்னாண்டோ 74 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தனர்.

இந்தநிலையில் தமது வெற்றி இலக்கை நோக்கி ஸ்கொட்லாந்து அணி துடுப்பாடிய நிலையில் மழை குறுக்கிட்டது.

அதற்கமைய போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டதுடன் வெற்றி இலக்காக 235 ஓட்டங்கள் ஸ்கொட்லாந்து அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அந்த அணி 33.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 199 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

 

 

 

Related posts

குத்துச்சண்டை வீரருக்கு ஓராண்டு தடை

மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட்ட ப்ராவோ

சுதந்திரக் கிண்ண சுற்றுத்தொடர் – நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து கவலை தெரிவிக்கும் பங்களாதேஷ்