வகைப்படுத்தப்படாத

மாகாண மட்டத்தில் கல்வி சார்ந்த போட்டியை உருவாக்க வேண்டும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – மாகாண மட்டத்தில் கல்வி சார்ந்த போட்டியை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

கல்வியை அரசியல் மயப்படுத்தாது முன்னெடுத்துச் செல்வது அரசாங்கத்தின் நோக்கமென்றும் பிரதமர் கூறினார்;.

பலப்பிட்டி சித்தார்த்த மத்திய மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் , இவ்வாறான போட்டியின் மூலம் ஏனைய மாகாணங்கள் கொழும்பு நகருடன் போட்டியிடும் நிலைமை உருவாகுமென்றும்; குறிப்பிட்டார்.

பிரதமர் அங்கு தொடாந்து உரையாற்றுகையில் :

அரசில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் கல்வி அபிவிருத்தியில் திடசங்கற்பம் பூண்டுள்ளன. இன்றைய தொழில் சந்தையில் பிரவேசிக்க பிரத்தியேக அறிவு அவசியப்படுகிறது. அத்தகைய அறிவு இல்லாத காரணத்தால் பிரச்சினைகள் எழுந்துள்ளன. புதிய தொழில்நுட்ப இடப்பரப்பில் மாணவ மாணவியருக்கு உரிய அறிவை பெற்றுக்கொடுப்பது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

13 வருட பாடசாலை கல்வியை கட்டாயமாக்குவது உயர்தர வகுப்பில் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்கள் சகலருக்கும் டெப் கணனிகளை வழங்குவது ஆகிய இரு விடயங்களில் அரசாங்கம் கூடுதல் அக்கறை கொண்டுள்ளது. பாடசாலை கல்வியின் கடைசி இரண்டு வருடங்களில் தொழில் பயிற்சி பெற்றுக்கொடுப்பது அரசாங்கத்தின் மற்றொரு அபிலாஷை. இந்த காலப் பகுதியில் மாற்று மொழியை கற்கும் வசதியும் ஏற்படுத்தப்படும். விளையாட்டை ஒரு பாடமாக கற்கும் வாய்ப்பும் வழங்கப்பட வேண்டும். பாடசாலை மாணவர்களுக்கு அடுத்து வரும் மூன்றாண்டுகளுக்குள் டெப் கணனிகளை வழங்க முடியுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

 

Related posts

இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து

பிரதமர் மோடியின் உலங்கு வானூர்தி காரணமாக ஹட்டனில் 3 வீடுகள் கடும் சேதம்!

அமெரிக்காவில் கடும் பனிப்புயல் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து