(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் பங்களாதே{க்கும் இடையில் நிலவும் எல்லையற்ற உறவு காரணமாக இலங்கைக்காக தமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லை.
இதனால் எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை எதிர்பார்ககும் உதவியை செய்வதற்கு தமது நாடு தயாராக இருப்பதாக பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தெரிவித்தார்.
பங்களாதே{க்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று பிற்பகல் டாக்கா நகரலிலுள்ள ளுழயெசபழn ஹோட்டலில் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரை சந்தித்த போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் இந்த விஜயம் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை – பங்களாதேஷ் உறவின் மைல்கல்லாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.
தான் உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவுக்கு பங்களாதேஷ் அரசாங்கம் வழங்கிய உணர்வுபூர்வமான வரவேற்புக்காக நன்றி தெரிவித்த ஜனாதிபதி , பங்களாதேஷ் எமது நாட்டின் நேர்மையான நட்பு நாடெனவும், கடந்த போர்க்காலத்திலும், வெள்ளத்தின் போதம் பங்களாதேஷிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பை நன்றியுடன் நினைவு கூறுவதாகவும் தெரிவித்தார்.
தான் பங்களாதேஷூக்கு புதியவர் அல்ல என குறிப்பிட்ட ஜனாதிபதி , முன்னர் சுற்றாடல் அமைச்சராகவும், சுகாதார அமைச்சராகவும் பங்களாதேஷூக்கு மேற்கொண்ட விஜயங்களையும் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் ஷெயிக் ஹஸீனா அம்மையாரின் தலைமையின்கீழ் பங்களாதேஷ் அடைந்துள்ள முன்னேற்றம் தொடர்பில் பாராட்டுக்களை தெரிவித்த ஜனாதிபதி , இரு நாடுகளுக்குமிடையில் முதலீட்டு மற்றும் வர்த்தக உறவுகளை விரிவுபடுத்துவதற்காக மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார, பிரதியமைச்சர்களான மொஹான் லால் கிரேரூ, நிசாந்த முத்துஹெட்டிகம உள்ளிட்டோர் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சருடனான இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.