வகைப்படுத்தப்படாத

இளம் பிக்குமார் அமைப்பு மற்றும் பிரதமருக்கிடையில் சந்திப்பு – [VIDEO]

(UDHAYAM, COLOMBO) – தொல்பொருள் பெறுமதி மிக்க இடங்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தற்போது சில தரப்பினர் குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மத சுலோகத்தை பயன்படுத்தப்படுவதை முற்றாக நிராகரிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இளம் பிக்குமார் அமைப்பு மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு இடையில் அலரிமாளிகையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்..

இந்த இடங்களைப் பாதுகாப்பதற்கான முறையான வேலைத்திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது தொல்பொருள் மற்றும் உலக மரபுரிமை என்ற ரீதியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை பாதுகாப்பது தொடர்பிலான விடயங்களைக் கண்டறிந்து மூன்று வார காலப்பகுதிக்குள் அது தொடர்பில் அறிக்கையொன்றைப் பெற்றுக் கொள்வதற்கு எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்..

வரலாற்று சிறப்புமிக்க தம்புள்ள ரஜ மஹாவிஹாரை தொடர்பில் தற்போது உண்மைக்குப் புறம்பான விடயங்களைத் தெரிவிக்கின்றனர். தம்புள்ள ரஜமஹா விஹாரை உலகின் மரபுரிமை இடமாகும். இது தொடர்பில் உண்மையை மறைக்க சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். இருப்பினும், உண்மை நிலையை சரிவரப் புரிந்து கொள்ளும் ஆற்றல் பொதுமக்களுக்கு உண்டு. இளம் பிக்குமார்களின் கல்வி நடவடிக்கைகள் குறித்த விடயங்களைக் கண்டறிவதுடன் நாட்டின் விஹாரைகளை மேம்படுத்துவதிலும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 150 விஹாரைகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க காசோலைகள் வழங்கப்பட உள்ளன.

Related posts

தேர்தலை பிற்படுத்த அலரி மாளிகையில் கலந்துரையாடல்

மாணவர்களின் வரவு குறைவு

‘ ආවා’ කල්ලියේ බවට සැකකෙරෙන තරුණයින් පස් දෙනෙක් අත්අඩංගුවට