(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்னால் முன்னர் இருந்த பேருந்து நிலையத்தில் பெண் தலமைத்துவக் குடும்பங்கள் மற்றும் முதியவர்களால் தமது வாழ்வாதாரத்திற்கு நடத்துகின்ற சிறு பெட்டிக்கடைகளுக்கு சட்டத்தில் கிடைக்காத அனுமதி கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைய உள்ள பிரதான பேருந்து நிலையத்தில் கிளிநொச்சியில் உணவகம் ஒன்றினை நடத்திவருகின்ற பெரும் வரத்தகர் ஒருவருக்கு கடை ஒன்றினை நடத்துவதற்கு கிளிநொச்சி கரச்சி பிரதேச சபையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கிளிநொச்சியில் சிறுவியாபாரங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மத்தியில் கவலையை ஏற்ப்படுத்தி உள்ளது
இது தொடர்பில் கரச்சி பிரதேசசபைச் செயலாளர் கம்சனாதன் அவர்களை எமது பிராந்தியச் செய்தியாளர் தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியபோது
குறித்த கடைக்கான அனுமதி தற்காலிகமாக வழங்கப்பட்டதாகவும் குறித்த இடத்தில் பேருந்து நிலையம் இயங்குவதால் பிரயாணிகள் வீதியினைமாறி கடைகளுக்கு செல்வதாக தனியார் மற்றும் இலங்கைப் போக்குவரத்து பிரிவினரால் கடை ஒன்று தேவை என விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாகவும் குறித்த இடத்தில் சுகாதாரமான நிலைமை இல்லை என சுகாதாரப் பிரிவினரால் சுட்டிக்கட்டப்பட்டதனாலும் மற்றும் பேருந்து நிலைய வேலைகள் நடைபெறுவதால் பாதுகாப்பு இல்லை என்பதாலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்
இருப்பினும் குறித்த வர்த்தகர் பிரதேச சபையின் அனுமதி மறுக்கப்பட்ட போதும் அடாத்தாக குறித்த கடையினை இயக்கிவருவதாகவும் தம்மால் முதாலாம் கட்டமாக அவரிற்கான அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது அதனைத்தொடர்ந்து தாம் சட்டநடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்
ஆனாலும் அவ் கடைக்கு மின்சார இணைப்புக்கள் வழங்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் இயங்கி வருகின்றதுடன் குறித்த வர்த்தகருக்கு மட்டும் அனுமதி தற்காலிகமாக வேணும் வழங்கப்பட்டு இருந்ததுடன் மின்சார இணைப்பும் வளங்கப்பட்ட்டு உள்ளமையால் இதன் பின்னணியில் அரசியல் பலம் அல்லது அதிகார பலம் இருக்கும் என கல்வியியலாளர்கள் தெரிவிக்கின்றனர் ஒரு சிறு வியாபாரிகளுக்கு கிடைக்காத அனுமதிகளும் சலுகைகளும் இவருக்கு கிடைத்துள்ளமையால் கட்டாயம் இவற்றில் ஒன்று இவரின் பின்புலத்தில் இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்
எஸ்.என்.நிபோஜன்