வணிகம்

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிப்பு

(UDHAYAM, COLOMBO) – இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மீள ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதின் ஊடகங்களுக்கு நேற்று(12) தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் டியூனிசியாவிற்கும் இடையிலான வர்த்தக உறவுகள் தற்போது ஸ்தம்பித நிலையில் காணப்படுகின்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை காத்திரமான அடிப்படையில் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தேயிலையை டியூனிசியாவிற்கு ஏற்றுமதி செய்யவும், டியூனிசியாவின் இலத்திரனியல் சாதனங்கள் மற்றும் ஆடைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்யவும் சந்தர்ப்பம் ஏற்படும் என அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related posts

சுற்றுலாத்துறை இயல்புக்கு திரும்ப அமெரிக்கா உதவும்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 2019 இல் 5.1 சதவீதமாக அதிகரிப்பு

சீமெந்துவின் விலை குறைப்பு!