(UDHAYAM, COLOMBO) – அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மூத்த மகன் டொனால்ட் ட்ரம்ப் ஜே.ஆர். ரஷ்யாவின் சட்டத்தரணி ஒருவரை சந்தித்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவின் ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
அவருக்கம் ரஷ்யாவின் குறித்த சட்டத்தரணிக்கும் இடையில் பரிமாற்றிக் கொள்ளப்பட்ட மின்னஞ்சல்களை அவரே வெளியிட்டுள்ளார்.
இதன்படி ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலரிகிளிண்டனை பாதிக்கக்கூடிய தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த சந்திப்பு நிகழ்த்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இது குறித்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார்.
வெள்ளைமாளிகையின் பேச்சாளரால் வாசிக்கப்பட்ட இந்த அறிக்கையில், தமது மகன் மிகவும் வெளிப்படைத் தன்மையாக நடந்து கொண்டமையையிட்டு பெருமையடைவதாக கூறியுள்ளார்.