விளையாட்டு

இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளர் நியமனம்!

(UDHAYAM, COLOMBO) – இந்திய கிரிக்கட் அணிக்கான தலைமை பயிற்சியாளராக ரவி சரஷ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்ட அனில் கும்ப்ளே சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் அந்த பதவியில் இருந்து விலகினார்.

இதனை அடுத்து, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு நேற்றைய தினம் சௌரவ் கங்குலி தலைமையிலான கிரிக்கட் ஆலோசனைக்கு குழு நேற்று விண்ணப்பதாரிகளிடம் நேர்காணல் நடத்தியிருந்தது.

இந்த நேர்காணலுக்குப்பின் தலைமை பயிற்சியாளர் யார்? என்பது அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அதற்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுவதாக இந்திய கிரிக்கட் ஆலோசனைக்குழு தலைவரான சௌரவ் கங்குலி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழு, இன்று மாலைக்குள் தலைமை பயிற்சியாளரை அறிவிக்குமாறு கோரியிருந்தது.

இதனை அடுத்து, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவராக ரவி சாஷ்திரி நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இந்திய அணியின் முன்னாள் அணித் தலைவர் என்பதுடன் இந்திய கிரிக்கட் துறை சார்ந்த பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

Related posts

ஒரு நாள் போட்டிகளில் மற்றுமொரு மைல்கல்லை கடந்த தோனி

வார்னர் மரண அடி: பங்களாதேஸ் அணியுடன் மோதிய அவுஸ்திரேலிய அணிக்கு திரில் வெற்றி

ஷந்திமாலுக்கு ஓய்வு