வகைப்படுத்தப்படாத

ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்ட 40 மாணவர்கள் வைத்தியசாலையில்

(UDHAYAM, COLOMBO) – மத்துகமைவலகெதர மகா வித்தியாலய மாணவர்கள் சிலர், அசாதாரண நிலைமையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தரம் 6 மற்றும் 8 இல் கல்வி பயிலும் சுமார் 30 மாணவர்களே இவ்வாறு மத்துகமை தர்கா மருத்துவமனையில் இன்று முற்பகல் அனுமதிக்கப்பட்டனர்.

அத்துடன், சுவாச கோளாறு உள்ளிட்ட பல நோய் அறிகுறி காரணமாக, மேலும் 10 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் பலருக்கு வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவில் கிசிச்சை அளிக்கப்பட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமையும் இவ்வாறான ஒவ்வாமை காரணமாக 40 மாணவர்கள், மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

England have Ashes points to prove against Ireland

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் வைத்து கைது

මරණ දඬුවමට එරෙහි පෙත්සම් යළි සළකා බැලීම අද