விளையாட்டு

உயரம் பாய்தலில் தங்கபதக்கத்தை வென்றார் காவியா

(UDHAYAM, COLOMBO) – தடகளத் தொடரில் பெண்களுக்கான 14 வயதுப் பிரிவு உயரம் பாய்தலில் வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தை சேர்ந்த கே.காவியா தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வடமாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியில் கே.காவியா 1.32 மீற்றர் உயரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி ஆர்.டிலக்சனா வெள்ளிப் பதக்கத்தையும், பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த ஆர்.நிலாவாணி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாணய சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

சிறந்த விருதினை தட்டிச் சென்ற ‘அசாம்’

உசைன் போல்ட் இற்கு கொரோனா உறுதி