வகைப்படுத்தப்படாத

பாடசாலை மாணவர்களுக்கு போதைவஸ்து விற்பனை செய்தவர் கிளிநொச்சியில் கைது

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி நகர்ப்புறங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள்  சிலரிற்கு மாவா  என்கின்ற போதை வஸ்தை  விற்பனை செய்த குற்றத்தில்  ஒருவர் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ண அவர்களின் விசேட  குழுவினரால்  நேற்று இரவு இரணைமடுப் பகுதியில் வைத்துக்  கைதுசெய்யப் பட்டுள்ளார்

இது தொடர்பில்  மேலும் தெரியவருவதாவது

குறித்த நபர் பாடசாலை மாணவர்களுக்கு  குறித்த போதைவஸ்தை  வினயோகிக்கின்றார்  என கிராமமக்களால் கிளிநொச்சி முல்லைத்தீவிர்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் மகேஷ் வெளிக்கண்ண அவர்களுக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக  அப்பகுதி சிறுவன் ஒருவனுடன் சிவில் உடையில் சென்ற போலீசார் ஒருவர் போதைப்பொருள்  விற்பவரிடம் பணம் கொடுத்து போதைப்பொருளை பெற்றுக்கொண்டதுடன்  பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்த சம்பவத்தினை உறுதி செய்துகொண்ட  குழுவினர் சந்தேகநபரை கைதுசெய்துள்ளனர்

மேலதிக விசாரணைகளின் போது  அவர் குறித்த போதைப்பொருளினை  விற்பனை செய்வதற்கான அனுமதிப்பத்திரம் இல்லாமலே  விற்பனை செய்துள்ளார் என தெரிய வந்துள்ளதுடன்  இன்றைய தினம் சந்தேக நபரை  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த உள்ளனர்.

Related posts

மத்திய மாகாணத்திலும் அம்பியூலன்ஸ் வண்டி சாரதிகள் வேலை நிறுத்தபோராட்டம்

Sri Lanka to honour retired quick Kulasekara tomorrow

CID arrests NPC Secretary