வகைப்படுத்தப்படாத

ஆகக்கூடிய பலன்கள் கிட்டக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படும் – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – பொதுமக்களுக்கு ஆகக்கூடிய பலன்கள் கிட்டக்கூடிய அபிவிருத்தி முறையொன்றை அறிமுகப்படுத்துவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வங்கியாளர்கள் நிறுவனத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதமர் கலந்து கொண்டு உரையாற்றினார். நேற்று இடமபெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் தொடந்து உரையாற்றுகையில் அடுத்த வருடம் தொழில்வாய்ப்புகளை உருவாக்கும் வருடமாக அமையும். இவ்வருடத்தில் 6 சதவீத பொருளாதார அபிவிருத்தி எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிபிட்டார்.

தற்போது பல முதலீடுகள் நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நிதி நகரத்தைக் கட்டியெழுப்பும் தேவை ஏற்படும். இதன் மூலம் உரிய முதலீடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன. சட்டம் மற்றும் சமாதானத்தை மதிக்கும் அபிவிருத்தி கொண்ட நாடொன்றைக் கட்டியெழுப்புவதே சமகால அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகுமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறினார்.

கடந்த அரசாங்கம் நாட்டின் அடிப்படை வசதி அபிவிருத்திக்கு வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவில் கடனைப் பெற்றிருந்தது. இக்காலப்பகுதியில் இளம் சமூகத்தினருக்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்காததனால் பெரும் எண்ணிக்கையானோர் வெளிநாடு சென்றனர். இவர்களில் பெரும்பாலானோர் நாட்டிற்குத் தேவையானவர்கள். பொருளாதார ஸ்தரத்தன்மை இல்லாததன் காரணமாக நாட்டை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்ல முடியாது. இதற்கு அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றும் பிரதமர் கூறினார்.

கடந்த அரசாங்கம் விட்டுச் சென்ற கடன் சுமை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகையில் இந்த கடனை எமது நாணயத்தில் செலுத்தக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது

நாட்டின் கடன் சுமையை 70 சத வீதத்திலிருந்து 60 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு காலப்பகுதி வரையிலும் வருடமொன்றுக்கு ஒரு பில்லியன் ரூபா கடனாகச் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts

தபால் ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

කොළඹ ප්‍රදේශ කිහිපයකට අද අඩු පීඩනයෙන් ජලය

அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் உன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை…