வகைப்படுத்தப்படாத

தொழிலாளர் தேசிய முன்னனி அரசியல் கட்சியாக பதிவூ ..அர்பணிப்புமிக்க அரசியல் பணிக்கு கிடைத்த அங்கிகாரம்தி – லகர் எம்.பி.

(UDHAYAM, COLOMBO) – தொழிலாளர் தேசிய சங்கம் ஒரு காலத்தில் அரசியல் கட்சியாகவூம் செயற்பட்டிருந்தது. எனினும் நயவஞ்சகமான முறையில் அந்த அங்கீகாரம் கைமாற்றதன் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தை தொழிற்சங்கமாக பொறுப்பெடுத்த தற்போதைய தலைமை தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் பிரிவினை ஆரம்பித்து செயற்படுத்தி தற்பொது அதனை  தேர்தல் தேர்தல் திணைக்களத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக பதிவூசெய்யப்பட்டு  ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இது தொழிலாளர் தேசிய முன்னணியின் அர்ப்பணிப்பான அரசியல் பயணத்துக்கு கிடைத்த வெற்றியாகும் என அதன் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் திணைக்களம் அரசியல் கட்சிகளை பதிவூசெய்யூம் விண்ணப்பதினை இந்த வருட ஆரம்பத்தில் கோரியிருந்தது. அதன்படி 92 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்ற நிலையில் 15 அரசியல் கட்சிகள் பரிசீலனைக்கு ஆண்டு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியாக ஆறு கட்சிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதில் ஒரு கட்சியாக அமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய முன்னணியூம் உள்வாங்கப்பட்டுள்ளது. இது குறித்து கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் எம்.திலகராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதவது

தொழிலாளர் தேசிய சங்கம் 1965 ஆண்டு அமரர் வி.கே.வெள்ளையன் அவர்களால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்காக உருவாக்கப்பட்ட தொழிற்சங்கமாகும். இதில் கவிஞர் சி.வி.வேலுப்பிள்ளையூம் இணைந்துகொண்டு மக்களுக்கான ஜனநாயக அமைப்பாக சிறப்பாக செய்படுத்தி 1990களில் ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாகவூம் தேர்தல் திணைக்களத்தில் பதிவூ செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர் தேசிய சங்கம் எனும் அரசியல் கட்சியின் மயில் சின்னத்தில் இரண்டு தடவைகள் மாகாண சபை ஆசனங்களும் வென்றெடுக்கபட்டன. பிரதேச சபை உறுப்பினர்களும் தெரிவூ செய்யப்பட்டனர். குறிப்பாக 1999ல் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலில் மலையக கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்திய வம்சாவளி மக்கள் பேரணி என கூட்டாக போட்டியிட்டபோது தொழிலாளர் தேசிய சங்கத்தின் மயில் சின்னமே உத்தியோகபூர்வ சின்னமாகவூம் கட்சியாகவூம் செயற்பட்டது. மத்திய மாகாணத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுப்பினர்களும்; ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் மனோ கணேசன் மேல்மாகாண  உறுப்பினராகவூம் மயில் சின்னத்தில் தெரிவூசெய்யப்பட்டிருந்தனர்.

எனினும் 2000ம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட்ட தொழிலாளர் தேசிய சங்கத்தில்  நயவஞ்வசகமான முறையில் உள்நுழைந்த சிலர் அதன் அரசியல் பிரிவை  தேசிய ஜனநாயக கட்சி என பெயர் மாற்றம் செய்து பணத்திற்காக கைமாற்றி தலைமறைவாகிவிட்டனர். இந்த நிலையிலேயே 2006 ஆம் தற்போதைய அமைச்சர் திகாம்பரம் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைமையில் பொறுப்பேற்ற புதிய நிர்வாகத்தினர் தொழிற்சங்கத்தையூம் அரசியல் பிரிவையூம் புத்துயிர்ப்புடன் இயக்க ஆரம்பித்தோம். இதன்போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவை மீளப்பெறும் முயற்சி சட்ட ரீதியாக பலனிக்காத நிலையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொழிலாளர் தேசிய சங்கத்தின் அரசியல் பிரிவாக கட்டியெழுப்புவது எனும் தீர்மானம் 2007 ஆண்டு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. அதன் பிரகாரம் தொழிலாளர் தேசிய முன்னணி எனும் அரசியல் கட்சியாக செயற்பட ஆரம்பித்து 2009 ஆம் ஆண்டு தொழிலாளர் தேசிய முன்னணி அதன் முதலாவது மாநாட்டையூம் நடாத்தியதுடன் பதிவூக்காக தேர்தல் திணைக்களத்திற்கும் விண்ணப்பத்திருந்தது. தேர்தல்   திணைக்களத்தின் ஒழுங்கமுறைகளுக்கு அமைவாக புதிய கட்சிகளை பதிவூ செய்யூம் பணிகளில் பல்வெறு தாமதங்கள் ஏற்பட்டன.

பதிவூ செய்யப்பட்டும்  செயற்படாதிருக்கும் அரசியல் கட்சிகளுடன் பேரம் பேசி பல்வெறு அரசியல் தரப்பினரும் தனிநபர்களும அவற்றை தம்வசப்படுததி தங்களை பதிவூ செய்யப்பட்ட அரசியல் கட்சிகளாக அறிவித்துக் கொண்ட முறைகளை கையாண்டன. எமது முன்னைய அரசியல் கட்சியான தொழிலாளர் தேசிய சங்கம்  அத்தகைய நயவஞ்சகமான விளைவை சந்தித்த கட்சி என்ற வகையில் நாம் அத்தகைய முறைகளை தவிர்த்து தேர்தல்கள் திணைக்களத்தின் உரிய அங்கீகாரத்தைப் பெறும் வகையில் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்ததோடு தொடர்ச்சியாக விண்ணப்பங்களையூம் சமர்ப்பித்து வந்தோம்.

இந்த நிலையிலேயே இந்த ஆண்டின் ஆரம்பத்தில் கோரப்பட்டிருந்த விண்ணப்பங்களுக்கு அமைவாக கிடைக்கப்பெற்ற 92 கட்சிகளில் 15 பரிசீலனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டு அவற்றுள் 6 கட்சிகள்  அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டு தேர்தல்கள் திணைக்களத்தால் பதிவூ செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தேர்தல்கள் திணைக்களமாக மாத்திரமல்லாமல் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவாகவூம் செயற்படும் இந்த காலகட்டத்தில் எமக்கு கிடைத்திருக்கும் இந்த அங்கீகாரத்தினை கடந்த பத்து ஆண்டுகளில் நாம் மேற்கொண்ட அர்ப்பணிப்புமிக்க அரசியல் பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதுகின்றௌம். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அங்கத்துவ கட்சியாக செயற்படும் அதேவேளை தொழிலாளர் தேசிய முன்னணி தனித்துவமான கட்சியாகவூம் தொடர்ச்சியாக தனது பணிகளை முன்னெடுக்கும். கட்சியின் வளர்ச்சிப் பணியில் இணைந்திருக்கும் தோழமைகள்இ உறுப்பினர்கள் அனைவருக்கும் இது மகிழ்ச்சியான தருணமாகும். செயலாளர் என்ற வகையில் அவர்கள் அனைவருக்கும் நன்றிகளையூம் பாராட்டுக்களையூம் தெரிவிப்பதோடு இந்த ஆண்டு இறுதிக்குள் கட்சியின் மாநாட்டினை கூட்டுவதற்கும் நடவடிக்கை எடுத்துவருகிறௌம் எனவூம் இத்தால் அறியத்தருகின்றேன் என தெரிவித்துள்ளார்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

 

Related posts

இலங்கை மனிதயுரிமைகள் ஆணைக்குழுவில் தேர்தல் முறைப்பாடுகளுக்காக தனிப்பிரிவு

பொலன்னறுவை சிறுநீரக வைத்தியசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஜனாதிபதி தலைமையில்

தன்சானியாவில் எரிபொருள் தாங்கி வெடித்ததில் 35 பேர் பலி,65 பேர் காயம்