(UDHAYAM, COLOMBO) – மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் கண்டி உதவி இந்திய தூதுவரைச் சந்தித்தனர்.
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மத்திய மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டி உதவி இந்திய தூதுவர் ராதா வெங்கட்ராமனைச் சந்தித்தனர். இந்தச்சந்திப்பில் மத்திய மாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன் , சிங்.பொன்னையா , எம்.ராம். ஆர்.இராஜாராம் , திருமதி சரஸ்வதி சிவகுரு ஆகியோர் கலந்து கொண்டனர்.
மத்திய மாகாணசபையின் ஆளுங்கட்சி தரப்பைச் சேர்ந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தனித்து இயங்குவதற்கு ஏற்கனவே தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறானதொரு நிலையில் தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த மத்திய மாகாணசபை உறுப்பினர்களில் ஐந்து பேர் இன்றைய சந்திப்பில் கலந்து கொண்டுள்ளதோடு மத்திய மாகாணசபையின் உறுப்பினர் எம். உதயகுமார் தவிர்க்க முடியாத காரணத்தினால் கலந்து கொள்ளவில்லை.
கண்டி இந்திய உதவி தூதுவருடனான சந்திப்பின் போது மத்திய மாகாணசபையின் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் செயற்பாடுகள் குறித்து தூதுவருக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் தற்போதைய நிலைமை , இந்திய அரசாங்கத்தினால் மலையகப்பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்ற வேலைத்திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்