உள்நாடு

33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையுடன் 10 பேர் கைது

(UTV | கொழும்பு) -சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட 33 ஆயிரம் கிலோ மஞ்சள் தொகையொன்றுடன் மூன்று கொள்கலன் பாரவூர்திகள் மற்றும் 7 லொறிகள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுங்கத்திணைக்களம் மற்றும் கொழும்பு -13 பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

பாராளுமன்ற அமர்வு தொடர்பிலான தீர்மானம்

இலங்கையில் அதானியின் எரிசக்தி திட்டங்கள் குறித்து வெளியான செய்தி

editor

மேலும் 12 கடற்படையினர் குணமடைந்தனர்