வகைப்படுத்தப்படாத

ஆறு புதிய கட்சிகளை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணைக்குழு

(UDHAYAM, COLOMBO) – ஆறு புதிய கட்சிகள், தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கையில் பதிவு செய்யப்பட்டுள்ள கட்சிகளின் எண்ணிக்கை 70 ஆக அதிகரித்துள்ளது.

தேர்தல் ஆணைக் குழுவின் தகவல்களுக்கு அமைய, ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய இடதுசாரி முன்னணி, தொழிலாளர் தேசிய முன்னணி, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய ஒற்றுமை முன்னணி மற்றும் சமவுடமைக் கட்சி என்பன புதிய கட்சிகளாக ஏற்றுக்ககொள்ளப்பட்டுள்ளன.

புதிய கட்சி உருவாக்கத்திற்கு 92 விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவற்றில் 15 கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 6 கட்சிகள் தேர்தல் ஆணைக் குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

Related posts

Wheat flour price hiked

சீன தொலை தொடர்பு நிறுவன அதிபர் மகள் கைது

Chief Justice summoned before COPE