வகைப்படுத்தப்படாத

நூறு வயதை தாண்டிய முதியோர் தொடர்பில் அறிவிக்கவும்

(UDHAYAM, COLOMBO) – நூறு வயதை தாண்டிய முதியோர்கள் மற்றும் 15 பிள்ளைகளை விட அதிகமாக கொண்ட 75 வயதை தாண்டிய பெற்றோர்கள் தொடர்பில் தகவல்களை சேகரிப்பதற்கு தேசிய முதியோர் செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி அந்த தகவல்களை இந்த மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அருகில் உள்ள பிரதேச செயலகத்தில் வழங்குமாறு அந்த செயலகம், மக்களிடம் கோரியுள்ளது.

எதிர்வரும் ஓக்டோபர் மாதம் முதலாம் திகதி முதியோர் தினத்தை முன்னிட்டு அவர்களை கௌரவிப்பதற்காக இந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாக தேசிய முதியோர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

Dr. Shafi produced before Court

ஸிம்பாப்வே தேர்தல்: படையினரின் துப்பாக்கிச் சூட்டில் மூவர் பலி

டிக் டாக் செயலிக்கு தடை