வகைப்படுத்தப்படாத

மாகம்புர துறைமுகத்தை விற்பனை செய்ய மாட்டோம் – அமைச்சர் மஹிந்த சமரசிங்க

(UDHAYAM, COLOMBO) – பல்வேறுப்பட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ள ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுக திட்டம் மற்றும் அங்குள்ள ஊழியர்களின் பிரச்சினைகளை ஆராய்வதற்காக, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றைய தினம் விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது, துறைமுக ஊழியர்களுடனான கலந்துரையாடலின் போது ஊழியர்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சர், மாகம்புர துறைமுகத்தை விற்பதற்கு ஒரு போதும் நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று கூறினார்.

அத்துடன், துறைமுகத்தின் பாதுகாப்பினை உறுதிச் செய்து, நாடு முகங்கொடுகின்ற கடன் சுமையை குறைத்து தேசிய தேவைக்கு முன்னுரிமை வழங்கும் புதிய முதலீட்டு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இச்செயற்றிட்டத்தின் போது, துறைமுகத்தில் பணியாற்றுகின்ற அனைத்து ஊழியர்களினதும் தொழில் பாதுகாப்பினை உறுதிச் செய்யும் பொருட்டு, காணப்படுகின்ற சட்ட சிக்கல்களை மனிதாபிமான முறையில் தீர்பதற்கு நடவடிக்கையெடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இவ்விஜயத்தில் துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை பிரதி அமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகம, துறைமுகங்கள் மற்றும் கப்பல்துறை அமைச்சின் செயலாளர் எல்.பி.ஜயம்பதி, இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் கலாநிதி பராக்கிரம திசாநாயக்க, ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகத்தின் தலைவர் சுகத் ஹதுன்கே உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்துக்கொண்டார்கள்.

Related posts

மடுல்ல பிரதேச சபை மற்றும் வெங்கள செட்டிக்குளம் பிரதேச சபைக்கான முடிவுகள்

FaceApp එකෙන් වයසට ගිය අයට අනතුරු ඇඟවීමක්

கலிபோனியாவில் ஐவர் சுட்டுக்கொலை