கேளிக்கை

‘ஜெயம் ரவி, நடிகைகளுக்கு கிடைத்த வரம்’ – சயிஷா

(UDHAYAM, COLOMBO) – ஜெயம் ரவி மாதிரி ஒரு நடிகர் கிடைப்பது வரம் என்று ‘வனமகன்’ திரைப்படத்தின் நாயகி சயிஷா புகழாரம் சூட்டியுள்ளார்.

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜெயம் ரவி, சயிஷா நடித்த ‘வனமகன்’ திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப்படத்தின் நாயகி மும்பையை சேர்ந்தவர். பொலிவுட் சூப்பர் ஸ்டார் திலீப் குமாரின் பேத்தி சயிஷா என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழத் திரைப்படம் மூலம் தான் சினிமாவில் அறிமுகம் ஆகவேண்டும் என்று உறுதியாக இருந்த நிலையில் ‘அகில்’ எனும் தெலுங்குத் திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார்.

‘அகில்’ திரைப்படத்தை பார்த்த இயக்குநர் ஏ.எல்.விஜய் தற்போது ‘வனமகன்’ திரைப்படத்தில் நடிக்க வைத்துள்ளார்.

‘வனமகன்’ திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானது மிகவும் மகிழ்ச்சி என சயிஷா கூறியுள்ளார்.

மேலும் கோலிவுட்டில் அறிமுகமாகும் ஹீரோயின்களுக்கு ஜெயம் ரவி மாதிரி ஹீரோ கிடைப்பது வரம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Related posts

தாய்மையடைந்ததைக் கொண்டாடும் எமி ஜாக்‌ஷன்?

ஸ்ரீதேவி நடித்த கடைசி படம் வெளியானது

தீபிகா படுகோனின் வைரலாகும் PHOTOS