வகைப்படுத்தப்படாத

2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டிய விதம் தொடர்பில் டில்வின்

(UDHAYAM, COLOMBO) – அறிவுபூர்வமான கலந்துரையாடல் மற்றும் வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே 2020 ஆம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாக்கப்பட வேண்டும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

புலத்கொஹூபிட்டிய பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ஜே விபியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இதனை தெரிவித்தார்.

பொருத்தமற்ற காரணத்தினால் மகிந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

நல்லாட்சி அரசாங்கம் நாட்டுக்கு பொருத்தமற்றதாக கருதப்படுவதனால் 2020 இல் இந்த ஆட்சி கவிழ்க்கப்பட வேண்டும்.

இந்த இருவரும் நாட்டுக்கு பொருத்தமற்றவர்களாயின் மாற்று தேர்வொன்று தேவை.

எனவே, அது தொடர்பில் மக்கள் சிந்திக்க வேண்டிய காலம் உதயமாகியுள்ளதாக டில்வின் சில்வா குறிப்பிட்டார்.

Related posts

Australia beat England to win 2nd Women’s Ashes ODI

வெளிநாட்டு நிதியுதவி சர்வதேச ரீதியில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள சமிக்ஞை

இரண்டு வாரங்களுக்குள் அரசியல், பொருளாதார ரீதியான முக்கிய தீர்மானங்கள்