(UDHAYAM, COLOMBO) – உமா-ஒயா செயற்றிட்டம் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழு இன்று உமா ஒயா செயற்றிட்ட வளாகத்திற்கு விசேட மேற்பார்வை விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
சில வீடுகளின் கூரைகளிலிருந்து நீர் கசியும் நிலை குறித்து இந்த உபகுழு விசேட ஆய்வுகளை மேற்கொள்ளும். இதற்கு மேலதிகமாக இந்த செயற்றிட்டத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் மற்றும் பயிர்ச்செய்கை நிலங்கள் குறித்தும் விசாரணை மேற்கொள்ளும்.
வீட்டுக்கூரை மற்றும் கால்வாய்களுக்கு ஊடாக வீடுகளுக்கு நீர் கசியும் நிலை குறித்து வீட்டு உரிமையாளர்களுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றையும் மேற்கொள்வதற்கு அமைச்சரவை உபகுழு திட்டமிட்டுள்ளது.
இந்த விசாரணைகளின் அறிக்கைகளை அமைச்சரவை சமர்ப்பிப்பது உபகுழுவின் நோக்கமாகும்.
இதுவிடயம் குறித்து அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும் அங்குள்ள மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும்.
அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மஹிந்த அமரவீர மற்றும் விஜித் விஜயமுனி சொஸ்சா ஆகியோர இந்த அமைச்சரவை உபகுழுவில்; இடம்பெற்றுள்ளனர்.