வகைப்படுத்தப்படாத

டெங்கு தொற்றால் பதுளை மாணவன் மரணம்

(UDHAYAM, COLOMBO) – டெங்கு தொற்றுக்கு உள்ளாகி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்விகற்கும் 16 வயது மாணவனே உயிரிழந்துள்ளதாக, எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, உயிரிழந்த மாணவனின் சகோதரியும் டெங்கு தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1 வருட காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 72ஆயிரம் என தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், டெங்கு தொற்றுக்கு உள்ளாகிய 213 பேர் உயிரிழந்துள்ளனதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

கிழக்கு முதலமைச்சர் மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய தூதுவர் ஆகியோருக்கிடையில் சந்திப்பு

Ranjan to call on PM to explain controversial statement

ஞானசார தேரருக்கு எதிரான வழக்கு விசாரணை 24ம் திகதி