வகைப்படுத்தப்படாத

32 இலங்கையர்கள் நாடு கடத்தல்

(UDHAYAM, COLOMBO) – சட்டவிரோதமான முறையில் பல்கேரியாவில் வசித்து வந்த 32 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் விசேட விமானத்தின் மூலம் நேற்று நாட்டுக்கு வந்து சேர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல்காரர்களால் இத்தாலிக்கு அழைத்துச் செல்வதாக கூறி, துருக்கிக்கு அழைத்துச் சென்று கைவிடப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் இத்தாலி செல்லும் நோக்கில் பல்கேரியாவை சென்றடைந்துள்ளனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்ட அவர்கள் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

 

Related posts

ஆங் சான் சூகியின் விருது மீளப்பெறப்பட்டது

Another suspect surrenders over attack on van driver in Kalagedihena

சீன குழு – பிரதமர் சந்திப்பு