கிசு கிசுவிளையாட்டு

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

உலகக் கிண்ண கால்பந்தாட்டத் தொடரில் பங்குபற்றும் அணிகளை அதிகரிக்கும் திட்டத்தை சர்வதேச கால்பந்து சம்மேளனம் கைவிடுவதாக அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட தொடரில் இதுவரை 32 அணிகள் பங்குபற்றியுள்ளன. இந்த எண்ணிக்கை 2022 ஆம் ஆண்டு கட்டாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ணப் போட்டியின் போது 48 ஆக அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டது.

மேற்படி அணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதனால் தங்குமிட வசதி, போட்டி நடத்தும் மைதானங்கள் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எனவே அணிகளை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட்டுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

 

 

Related posts

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!

ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார் : இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம்

இந்தியா- நியூசிலாந்து : முதல் ஆட்டம் மழையால் பாதிப்பு