(UDHAYAM, COLOMBO) – ஜேர்மனியின் நாடாளுமன்ற உறுப்பினர் துருக்கியின் புலனாய்வாளர்களால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் காவற்துறையினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் துருக்கியின் புலனாய்வாளர்களால் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவைத் தளமாக கொண்டு செயற்படும் துருக்கியின் மதத்தலைவர் ஃபட்டுல்லா குலனுக்கு ஆதரவாளர்கள் குறித்தே துருக்கி இந்த புலனாய்வை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
ஃபட்டுல்லா குலன், துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பை மேற்கொள்ள முயற்சித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்தவிடயம் இரண்டு நாடுகளுக்கும் இடையில் ராஜதந்திர முறுகலை மேலும் தீவிரப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.