விளையாட்டு

T20 கிரிக்கட் : பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதலிட அரியணை மாறியது!

(UDHAYAM, COLOMBO) – T20 கிரிக்கட் வீரர்களுக்கான புதிய தரவரிசையில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

T20 கிரிக்கட் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் முதலிடத்தில் இருந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஒரு விக்கட் மட்டுமே எடுத்ததால் தாஹிருக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அவருக்கு பதிலாக பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் இமாத் வாசிம் முதலிட அரியணையில் ஏறியுள்ளார்.

இந்தியாவின் பும்ரா 2-வது இடத்தை பெற்றுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் தரவரிசையில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தில் நீடிக்கிறார்.

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2017/06/164528-1.jpg”]

Related posts

இங்கிலாந்துடனான போட்டியின் போது இலங்கை வீரர் பெதுமின் தலையில் பந்து தாக்கியது

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான தீர்மானமிக்க போட்டி இன்று

மேற்கிந்தியத்தீவுகள் 99 ஓட்டங்களினால் முன்னிலை