வகைப்படுத்தப்படாத

டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த நாளை தொடக்கம் முன்னெடுக்கப்படவுள்ள விசேட வேலைத்திட்டம்!

(UDHAYAM, COLOMBO) – டெங்கு பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாளை தொடக்கம் இரண்டு வார காலத்தை சுத்தப்படுத்தும் வாரமாக பிரகடனப்படுத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனையின் பேரில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக அதிகரிக்கக்கூடும் டெங்கு நுளம்புகளை கட்டுப்படுத்த இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக சிவில் பாதுகாப்பு படையினர் நூறு பேர் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

தேர்தல் காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்

සහරාන්ගේ තවත් ඥාතියෙක් අත්අඩංගුවට

Sri Lanka likely to receive light rain today