வகைப்படுத்தப்படாத

கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

(UDHAYAM, COLOMBO) – இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை  வீசப்பட்டுள்ளது  வீசப்படும் போது மூன்று ஆசிரியர்களும்  முப்பதிற்கும் மேற்ப்பட்ட  ஆசிரியர்களும் குறித்த  கட்டடத்துக்குள்  இருந்துள்ளனர்  இருப்பினும்  எவருக்கும் எவ்வித சேதங்களும் ஏற்ப்படவில்லை

குறித்த முன்பளிளிக்கு  விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்  மற்றும் கிளிநொச்சி மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ பிரிவினர் கிராமமட்ட அமைப்புக்கள் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ,கிராமசேவையாளர் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோருடன் நடந்த சம்பவம் தொடர்பாகவும் இதற்கு என்ன செய்யலாம் என்பது தொடர்பாவும் ஆராய்ந்தனர்

இதன்போது  குறித்த கிராமத்தின் கிராம அபிவிருத்திச் சங்கத்தினர்  குறித்த முன்பள்ளியை  புனரமைத்து தருவதாக கூறியுள்ளனர்

இருப்பினும்  முறித்த முன்பள்ளி  எவ்வித அடிப்படை வசதிகள்  எவையும் அற்று இயங்கிவருகின்றமை  குறிப்பிடத்தக்கது

எஸ்.என்.நிபோஜன்

Related posts

பெற்ற மகளுக்கு தந்தை செய்யும் காரியமா இது?

மாணவர்களின் வரவு குறைவு

ஜனாதிபதிக்கு அவுஸ்ரேலியாவில் அமோக வரவேற்பு