வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதி தலைமையில் இன்று இடர் முகாமைத்துவ தேசிய குழுக்கூட்டம்

(UDHAYAM, COLOMBO) – ஜனாதிபதி தலைமையில் இடர் முகாமைத்துவ தேசிய குழுக்கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.

சமீபத்திய இடர் நிலைமைகளால் சேதமடைந்த வீடுகள் பற்றி மாவட்ட மற்றும் பிரதேச மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆய்வின் விபரங்கள் இன்றைய கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அவற்றின் அடிப்படையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. தீர்மானங்களின் பிரகாரம் அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமுலாகும் என்று தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலன்சூரிய தெரிவித்தார்.

தேசிய வீடமைப்புத் தினத்தை முன்னிட்டு இடர் முகாமைத்துவ மற்றும் சுத்திகரிப்பு வேலைத்திட்டம் அமுலாகிறது. இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை வடக்கு, கிழக்கிலும் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

Crawl Director would love to make Nightmare on Elm Street reboot

நோட்டனில் ஆணின் சடலம் மீட்பு

சீன அரசின் அதிரடி உத்தரவு…