வணிகம்

உர நிவாரணம் வழங்கும் நடைமுறை இன்றுடன் பூர்த்தி

(UDHAYAM, COLOMBO) – சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கான உர நிவாரணத் தொகையை வழங்கும் நடைமுறை இன்று பூர்த்தியாவதாக தேசிய உரச் செயலகம் அறிவித்துள்ளது.

உரமானியம் வழங்குவதற்காக அரசாங்கம் 220 கோடி ரூபாவை வழங்கியிருப்பதாக உரச் செயலகத்தின் பணிப்பாளர் ஜீ.புஷ்பகுமார தெரிவித்தார்.

வடக்கின் சகல மாவட்டங்களிலும் உர நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா மாவட்ட விவசாயிகளின் தகவல்களை பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதன் காரணமாக இவ்விரு மாவட்டங்களில் மாத்திரம் உரமானிய உதவித் தொகை வழங்குவது தாமதமானது என்று திரு.புஷ்பகுமார தெரிவித்தார்.

மேலும் இம்முறை மிளகாய், சோயா, பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு, சோளம் முதலான மேலதிக பயிர்களை வயல்களில் நடும் விவசாயிகளுக்கும் உர நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்படும் பயிர்ச்செய்கைக்காக தலா 25 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்ய முயற்சி

சதொச ஊடாக மத்திய கிழக்கிலிருந்து பேரீச்சம்பழ இறக்குமதி

முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.5 இனால் உயர்வு