வகைப்படுத்தப்படாத

அஞ்சல் பணியாளர்களும், நோயாளர் காவுகை வண்டி சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில்

(UDHAYAM, COLOMBO) – அஞ்சல் சேவை பணியாளர்களும் நோயாளர் காவு வண்டிச் சாரதிகளும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல் தமது சேவைப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அஞ்சல் அலுவலக கட்டிடங்களை ஓய்வு விடுதிகளாக மாற்றும் செயற்திட்டத்திற்கு அனுமதி வழங்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தல், நிர்வாக பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், நோயாளர் காவு வண்டிச் சாரதிகளும் இன்றைய தினம் முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

காலை 8.00 மணிமுதல் இரண்டு நாட்கள் இந்தப் பணிப் புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அரசாங்கம் தமக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தே இந்தப் பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக நோயாளர் காவு வண்டிச் சாரதிகள் தெரிவித்துள்ளனர்.

 

Related posts

மினி பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

Low water pressure to affect several areas in Colombo

கவுதமாலா எரிமலை மீண்டும் வெடித்து சிதறியது உயிரிழப்பு 72 ஆக அதிகரிப்பு