வகைப்படுத்தப்படாத

இரணைதீவு மக்கள் ஏ32 வீதியை மறித்துப் போராட்டம்

(UDHAYAM, COLOMBO) – கிளிநொச்சி  பூநகரி இரணைதீவு மக்கள் தங்களின் சொந்த இடத்திற்குச் செல்வதற்கான கவனயீர்ப்பு  போராட்டம் ஒன்றை  கடந்த ஐந்தாம் மாதம்    முதலாம் திகதி ஆரம்பித்திருந்தனர் இப் போராட்டமானது இன்று தீர்வுகள் எவையும் இன்றி  54  நான்காவது நாளை எட்டிய நிலையில்  போராட்டத்தில் ஈடுபட்டிருந்த  சுமார் எழுநூறிற்கும்  மேற்ப்பட்ட மக்கள்  இன்று காலை அங்கிருந்து  சுலோகங்களைத் தாங்கியவாறு  பேரணியாக வந்து  முழங்காவில் மகாவித்தியாலயத்திற்கு  அருகில் உள்ள ஏ32 மன்னார் வீதியை மறித்து தமக்கான தீர்வினை கோரி  போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்

சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி மாவட்ட  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர்  இவ்வாறு வீதியை மறித்து போராட்டம் செய்வது சட்டத்திற்கு  முரணானது  இவ்வாறு  போக்குவரத்துக்கு தடையாக இருப்பவர்களை  கைது செய்யவும் முடியும்  இப்போராட்டத்தை நிறுத்த தேவையான ஆயுதங்கள் கருவிகள்  நீதிமன்ற உத்தரவு என்பன  எம்மிடம் உள்ளது  நாம்  எதனையும் செய்யவில்லை  பாதையின்  ஒருபகுதியை ஆவது  போக்குவதத்துக்கு  தயவுசெய்து தாருங்கள் என  கேட்டுக் கொண்டார்

இதற்கமைய  தற்பொழுது போராட்டம்  வீதியின் ஒருபுறத்துக்கு  மாற்றப்பட்டு போராட்டம் தொடர்கின்றது அத்துடன் இவ்வளவு நாட்களும் பொறுத்து விட்டோம்  இனிமேல் எங்களால் பொறுக்க  முடியாது இதற்கான பொறுப்பான பதிலை மேல்நிலை அரச அதிகாரி ஒருவர் தரும்வரை போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்

எஸ்.என்.நிபோஜன்

Related posts

Libya attack: ‘Dozens killed in air strike’ on migrant centre

மேற்கிந்திய தீவுகள் டெஸ்ட் அணியில் மீண்டும் கிரன் பவல்!

Prevailing windy conditions likely to continue – Met. Department