(UDHAYAM, COLOMBO) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 2 வது நாளாகவும் தொடர்கிறது.
மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி மூடப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
கடந்த புதன்கிழமை அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது சுகாதார அமைச்சில் வைத்து மாணாவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து பல மாணவர்கள் காயமடைந்த நிலையில், மருத்துவனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தசம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுவதாகவும் வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குறித்த போராட்டம் காரணமாக மருத்துவமனைகளின் மருத்துவ செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்தனர்.