வகைப்படுத்தப்படாத

மலையக பாடசாலை ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – மலையக பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கமைவாக எதிர்வரும் 28ம் திகதி தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சின் ஆலோசகர் ஆர்.பாஸ்கரலிங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு அமைவாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர். உயர்தர பரீட்சை தகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணசபைகளில் உள்ள பல பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாகவே இராஜாங்க அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

சமீபத்தில் நியமிக்கப்பட்ட உதவி ஆசிரியர்களின் கொடுப்பனவுகள் 10ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டது.

ஆனால் சில ஆசிரியர்களுக்கு இந்த கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்று தெரிவித்த அமைச்சர் இது தொடர்பாக மாகாண சபைகளே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மேலும் தெரிவித்தார்.

Related posts

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

71 பேரின் உயிரை பறித்த விமான விபத்திற்கான காரணம் இதோ……

රාජ්‍ය ආයතනවල දූෂණ සහ වංචා සෙවීමේ ජනාධිපති කොමීසමේ කාලය දීර්ඝ කෙරේ