(UDHAYAM, COLOMBO) – டெங்கு நோயை கட்டுப்படுத்தும் செயற்திட்டங்கள் குறித்து ஆராய அவுஸ்திரேலியாவின் வெளியுறவு அமைச்சர் ஜூலியா பிஸப் அடுத்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
டெங்கு நோயை கட்டுப்படுத்தும் திட்டங்கள், அவுஸ்திரேலியாவில் வெற்றியளித்துள்ளன.
இந்த நிலையில், இலங்கையில் தீவிரமாக பரவி வரும் டெங்கு நோய் குறித்து ஆராய அவுஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு வரவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனூடாக, டெங்கு நோயை கட்டுப்படுத்த அவுஸ்திரேலியாவில் மேற்கொண்ட திட்டங்களை இலங்கையிலும் நடைமுறைப்படுத்த எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்தின் மூலம் பக்டீரியாக்களை கொண்டு டெங்கு நுளம்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தோனேசியா மற்றும் வியட்நாமிலும் இந்த திட்டம் வெற்றியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித குறிப்பிட்டுள்ளார்.