(UDHAYAM, COLOMBO) – போர்த்துகல் நாட்டில் மூன்று தினங்கள் துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று ஏற்பட்ட பாரிய காட்டு தீ காரணமாக 61 பேர் பலியான நிலையில், இவ்வாறு துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தீயினால் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
போர்த்துக்கலின் தலைநகர் லிஸ்பனில் இருந்து 200 கிலோமீற்றர் தொலைவில், தென் பகுதி உள்ள வனப்பகுதியிலேயே இவ்வாறு தீ ஏற்பட்டது.
வேகமாக பரவிய தீயினால், குறித்த பகுதியின் ஊடாக வீதியில் பயணித்த வாகனங்களும் சிக்குண்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தீயினால் 4 சிறுவர்களும் பலியாகினர்.
பலர் வாகனங்களில் உள்ளே இறந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த நிலையில் இது மிகவும் கொடுரமான துன்பியல் நிகழ்வு என்று அந்த நாட்டின் பிரதமர் அன்டோனியோ கோஸ்டா (Antonio Costa) குறிப்பிட்டுள்ளார்.