வகைப்படுத்தப்படாத

450 மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் ஹட்டன் ரயில் நிலையம்.மற்றும் நவீன கடைத்தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் ரயில் நிலைய பிரிவு மறுசீரமைத்தல் மற்றும் பல்நோக்கு கட்டிட அடிக்கல் நாட்டும் நிகழ்வு மலையக புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம்   தலைமையில்  18.06.2017 காலை 11.30 நடைபெற்றது

ரயில் நிலையம்.வாகணத்தரிப்பிடம் மற்றும் கடைத்தொகுதிகள்  நிர்மாணிக்கப்படவுள்ள பலநோக்கு கட்டிடமானது

450 ரூபா மில்லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் மாநகர அபிவிருத்தி அதிகாரசபையின் மூலம் நிர்மாணிக்கப்படுகின்ற மேற்படி வேலைத்திட்ட அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்னர். சகவாழ்வு மொழி அமைச்சர் மனோகணேசன்.பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் மத்தியமாகாணசபை உறுப்பினர்களான சோ.ஸ்ரீதரன்.சிங்பொன்னையா.சரஸ்வதி சிவகுரு. உதயா.ராம்.மற்றும் ஹட்டன் நகரசபையின் செயலாளர். எஸ்.பிரியதர்சினி. உட்பட பலர் கலந்துகொண்டனர்

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

Related posts

India denies asking Trump to mediate in Kashmir

හිටපු නියෝජ්‍ය පොලිස්පතිවරයෙකුට වසර තුනක සිරදඬුවමක්

டெங்கு நோய் ஒழிப்பு திட்டம் : பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்